இலக்கியம்கவிதைகள்

அகமும் புறமும்

நான்

நாம்

நாங்கள்

என்பனவெல்லாம்

சுயநலம் – எனநீங்கள்

பெயர் சூட்டலாம்

ஆனால்

உங்களை நோக்கி

துப்பாக்கிகள் நீளும் போது

குண்டுகள் வீசப்படும் போது

உங்களது உரிமைகள்

பறிக்கப்படும் போது

உங்களது இருப்பை

நிலைநிறுத்து – நீங்களே

நான்

நாம்

நாங்கள் – எனப்

பேசத் தொடங்கலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *