சட்டத்தின் நிலைமாற்றமும் சமூகத்திற்கான நீதியும்
மாறுகின்ற காலத்தில் சட்டம் குறித்த புதிய கேள்விகள் எழுவது இயற்கை. இக்கேள்விகள்
ஆராயப்படவும் கலந்துபேசவும் வேண்டும். இதை நோக்காகக் கொண்டு நான்கு நாள் நிகழ்வாக
பேர்கன் பரிமாற்றங்கள் 2018 (Bergen Exchanges 2018) கிறிஸ்டியன் மிக்கல்சன் நிறுவனத்தினால் ( Chr.
Michelsen institute) ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி முதல் 24ம் திகதி வரை ஒழுங்கு செய்யப்பட்டது.
சட்டத்தின் பல்வேறு கோணங்கள், பார்வைகள், வேறுபட்ட நிலைப்பாடுகள் என வகைப்பட்ட
கருத்துக்களின் களமாக இப்பரிமாற்றங்கள் அமைந்தன. இதில் முக்கியமான இரண்டு விடயங்கள்
எனக்கு முக்கியமான கருப்பொருட்களாக எனக்கு அமைந்தன.
முதலாவது நீதியை நிலைநாட்டுவது தொடர்பில் சட்டத்தின் வகிபாகம் என்ன என்ற வினா, இதன்
உட்கிடையாக சட்டத்திற்கு நீதியா அல்லது நீதிக்கு சட்டமா என்ற இரு துணை வினாக்கள் ஆராயப்பட
வேண்டியவை. இவ்வினாக்கள் வெறுமனே சட்டப்புத்தகங்களுக்கும் நீதிமன்றுக்குள்ளுமான விடயமாக
மட்டும் அல்லாமல் சமூகம் சார்ந்த பார்வைகளும் அவசியமாகின்றன என்பது உணரப்பட வேண்டும்.
ஏனெனில் சட்டமும் நீதியும் குறுகிய சட்டகத்துக்குள் தொடர்ச்சியாகச் செயற்பட்டும் விளங்கப்பட்டும்
வருகின்றன. பல சமயங்களில் இவை இரண்டும் சமூகத்திற்கும் மனிதருக்குமானவை என்ற அடிப்படை
தொலைந்து போகிறது. எனவே இவை தொடர்பான விவாதங்கள் அனைத்துச் சமூகங்களிலும்
அவசியமாகின்றன.
இரண்டாவது சட்டமும் நீதியும் தொடர்பான அறஞ்சார்ந்த பார்வை. ஆறம் என்பது உலகப்
பொதுவானதன்று. அது நாட்டுக்கு நாடு சமூகத்திற்கு சமூகம் வேறுபடுகிறது. நீதியை வழங்கும் போது
நீதவான்கள் பல விடயங்களை கவனத்தில் கொள்கிறார்கள். அதில் அறம் முக்கிய இடத்தைப்
பிடிக்கிறது. இன்னொரு வகையில் நீதவானின் அகச்சார்புகள் இந்த அறத்தின் வழியில் தீர்ப்பில்
குறுக்கிடுகின்றன. இதை எவ்வாறு நிவர்த்தி செய்வது என்ற வினா விவாதிக்கப்பட வேண்டியது.
இவ்விரண்டு வினாக்களையும் இந்த பேர்கள் பரிமாற்றங்கள் என்னுள் எழுப்பியது. சுட்டத்தையும்
நீதியையும் சாதாரணமானவர்களிற்கு எட்டாத தூரத்தில் வைத்து அதைப் புனிதப்படுத்தாமல் அதைப்
பேசுபொருளாக்கியமை ஜனநாயக சமூகத்தின் வெளிப்பாடு. ஆதைக் கலந்து பேசுவதும் நீதிபதிகள்
தாங்கள் சில தீர்ப்புகளை தவறாக வழங்கியிருக்கிறோம் என்று ஏற்றுக் கொண்டதும் தங்களும்
மனிதர்களே தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் அல்ல என்று சொன்னதும் இந்நிகழ்வின் மணிமகுடம்.
இப்பண்பு ஆரோக்கியமான சமூகத்தின் குறிகாட்டி என்று சொல்லவியலும்.
நிகழ்வு தொடர்பான தகவல்களுக்கு: https://www.cmi.no/events/1961-bergen-exchanges-on-law-
social-transformation-2018