தேசபக்தன்
யார் தேசபக்தன்?
மூன்று கோடியில்
முடிக்க வேண்டிய திட்டத்தை
முப்பது கோடியில் வெற்றிகரமாய்
முடித்த பொறியியலாளனா?
விவசாயத்தை நிறுத்திவிட்டு
அரிசியை இறக்குமதி செய்யும்
அரசியல்வாதியா?
பாடசாலையில் தூங்கி
தனியார் வகுப்புகளில் விழிக்கும்
ஆசிரியரா?
உண்மையில் இவர்களில்
யார் தேசபக்தன்?